மெரீனா கடலில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட, இரண்டு பேர் மாயம்..!

சென்னை, மெரீனா கடலில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் மாயமாகினர்.

சென்னை ஆவடி கோதண்டகிரி விரிவு பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் தனுஷ் (17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தனுஷ் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் 11 பேருடன் மெரீனா கடற்கரைக்கு வந்தார். அங்கு அவர்கள் கண்ணகி சிலையின் பின்புறம் கடலில் இறங்கி குளித்தனர். இதில் அங்கு வந்த பெரிய அலையில் தனுசும் ஆகாசும் சிக்கி கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்த அவரது நண்பர்கள் சத்தமிட்டனர். இதைக் கவனித்த அங்கிருந்த மீனவர்களும், தீயணைப்பு படை வீரர்களும் இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். நீண்ட முயற்சிக்கு பின்னர்  ஆகாசை மட்டும் அவர்களால் மீட்க முடிந்தது.

தண்ணீரில் மூழ்கிய தனுஷ் சிறிது நேரத்தில் காணாமல் போனார். மீட்கப்பட்ட ஆகாஷ், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை போன்று, சைதாப்பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம் மகன் கோதண்டராமன் (16). இவர், ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் மெரீனா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள பகுதிக்கு புதன்கிழமை மாலை வந்தார். அங்கு அவர், தனது நண்பர்களுடன் கடலில் குளித்தார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த பெரிய அலையில் கோதண்டராமன் சிக்கிக் கொண்டார். கோதண்டராமனை காப்பாற்ற அவரது நண்பர்கள் முயன்றனர். ஆனால் அவர், தண்ணீரில் மூழ்கி சிறிது நேரத்தில் காணாமல் போனார்.

இது குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed