ஏரியில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது.

சென்னை, ஆவடி பகுதியில் ஏரியில் கொடூரமாக இரண்டு குழந்தைகளை மூழ்கடித்து கொலை செய்த தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை, ஆவடி கொள்ளுமேடு ஒண்டி தெருவை சேர்ந்தவர் கணேசன் (30). இவர், கூலி வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாரியம்மாள், இவர்களுக்கு திருமணம் ஆகி,ரித்திஷ் (7), ராகேஷ் (6) ஆகிய பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டன. இதனால், குழந்தைகளை விட்டுவிட்டு, மாரியம்மாள் பிரிந்து விட்டார்.


இந்த நிலையில் இன்று காலை கணேசன் இரண்டு குழந்தைகளை புழல் ஏரி வெள்ளானூர் பகுதிக்கு வந்தார். அங்கு, இரண்டு குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர், கத்தியால் தானும் கழுத்தறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் கிடைத்து, ஆவடி டாங்க் பேக்டரி போலீசார் விரைந்து வந்து, குழந்தைகளின் உடலை கைப்பற்றி, கணேசனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.