மணலியில், வெள்ள நீர் புகுந்தது 100 பேர் படகு மூலம் மீட்டனர்..! குழந்தைகளையும் கையில் தூக்கி வந்தனர்

சென்னை, மணலி மற்றும் புது நகரில், கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது அவர்களில் 100க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டனர். மேலும், குழந்தைகளையும் கைகளால் தூக்கிக்கொண்டு வந்தனர்.

தமிழகம் முழுவதும், வட கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது தொடர்ந்து. மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையில் வடசென்னை மிகுந்த பாதிப்புக்குள்ளானது.

சென்னை, மணலி, சின்ன மாத்தூர்,கலைஞர் நகர், மணலி புது நகரில், மழையின் காரணமாக குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளுடன் வெளியேற முடியாமல் தவித்தனர்.

மணலி தீயணைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான வீரர்கள், படகுகள் மூலம் அங்கு சென்று, அனைவரையும் பத்திரமாக மீட்டனர். குழந்தைகளையும் கைகளால் தூக்கிக்கொண்டு வந்தனர்.

பின்னர், அவர்களை, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இதைப்போன்று, பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டன.

வடபெரும்பாக்கம், ஆண்டார் குப்பம் சுங்கச்சாவடி, எம்.எப்.எல் சந்திப்பு உள்ளிட்ட சாலைகளில் உபரி நீர் ஆறாக ஓடி கடலில் கலக்கின்றன. அந்த வழியாக  வாகனங்கள் செல்லமுடியாமல் அவதியடைகின்றன.