தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வா! சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு ரூ.240ம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,850க்கும், சவரன் ரூ.38,800க்கும் விற்பனை ஆனது.

இன்று காலை தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.4,880ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.39,040க்கும் விற்பனையாகிறது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4880ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று உயர்வுடன் தொடங்கியது. சவரனுக்கு 40 ரூபாய் நேற்று உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக ரூ.240 அதிகரித்துள்ளது.

இரு நாட்களில் சவரனுக்கு ரூ.280அதிகரித்து, நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 1ம் தேதி சவரன் ரூ.38,360ல் இருந்தது, கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து தங்கம் விலை ஏறுமுகத்தில் பயணிக்கிறது.

தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.64.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1500 உயர்ந்து, ரூ.64,500க்கும் விற்கப்படுகிறது.