தங்கம் விலையைப் பார்த்து ஷாக் ஆகாதிங்க! இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. ஆனால் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,865க்கும், சவரன் ரூ.38,920க்கும் விற்பனை ஆனது. இதேவிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று காலையிலும் தொடர்கிறது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4865ஆக விற்கப்படுகிறது.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வந்தது.

கடந்த 2 நாட்களாக விலை சரிந்தும், இரு நாட்களாக விலை அதிகரித்தும் இருக்கிறது.

ஏறக்குறைய கிராமுக்கு 30 ரூபாயிலும், சவரனுக்கு 240 ரூபாயிலும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இன்றுதங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து, ரூ.63.60 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 சரிந்து, ரூ.63,600க்கும் விற்கப்படுகிறது.