தங்கம் விலையில் மாற்றம்! நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக விலைக் குறைவு அமைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 7ரூபாயும், சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,697 ஆகவும், சவரன், ரூ.37,576 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை (இன்று) காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 7ரூபாய் குறைந்து, ரூ.4,690ஆக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.37,520ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,690ஆக விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது.

வார தொடக்கத்தில்ருந்து சரிந்த தங்கம் சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது. ஆனால், கடந்த 3 நாட்களாக விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.696 அதிகரித்தது. இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், தங்கம் கிராம் ரூ.4651 என்ற விலையில் தொடங்கி இன்று ரூ.4,690 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது, கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு ரூ.352 விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை 3 நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.62.00ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ.62,000 ஆகவும் விற்கப்படுகிறது.