டிஜிட்டல் பாதுகாப்பு பெட்டகத்தில் 43 சவரன் தங்க நகைகள் மாயம்..!

சென்னை, கொரட்டூர் பகுதியில் தொழிலதிபர் வீட்டில், டிஜிட்டல் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 43 சவரன் நகை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கொரட்டூர்,  வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 3வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சந்திரசேகர் மனைவி, வீட்டில் உள்ள டிஜிட்டல் பாதுகாப்பு பெட்டகத்தை புதன்கிழமை திறந்தார். அப்போது அதில் இருந்த 43 சவரன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சந்திரசேகர், கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.