மகளின் திருமணத்திற்கு பணம் இல்லை; காங் பிரமுகர் தற்கொலை: கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டார்..!

சென்னை, வியாசர்பாடி பகுதியில் கடன் தொல்லை மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாத காரணத்தால் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு, காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை, வியாசர்பாடி எம்கேபி நகர் 14வது மத்திய குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஐவரிலால் ஜெயின். இவரின் மகன் அரிஷ் சந்த் (58). இவர், காங்கிரஸ் கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.

இவர், அதே பகுதியில் ரெடிமேட் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார்.  இவர், கொரோனா ஊரடங்கால் துணி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். இவரின் மகள் நேகா (23), ஆவார். இவருக்கு, வருகின்ற நவம்பர் மாதம் 21ம் தேதி அன்று, திருமணம் வைத்திருந்தார்.

இதற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் அவதியடைந்தார். பல இடங்களில் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தறுத்துக்கொண்டு, தற்கொலை செய்துக்கொண்டார்.  புகாரின் பேரில், எம்.கே.பி நகர் போலீசார் அரிஷத் சந்த் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,

You may have missed