டார்லிங், டார்லிங் என பாடி 11 வயது சிறுமியின் கைப்பிடித்து இழுத்த, வாலிபருக்கு போக்சோ

சென்னை, வண்ணாரப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமியிடம் டார்லிங், டார்லிங் என பாட்டுப்பாடி கைப்பிடித்து இழுத்த வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி 7வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி, இவரின் மகன் சாதிக் பாசா (25). இவர், சாலையில் சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்பவராம்.

இவர், அங்குள்ள ஒரு ஆட்டோவில் அமர்ந்துள்ளார். அப்போது, பக்கத்து தெருவை சேர்ந்த 11 வயது சிறுமி கடைக்கு சென்றார். அவர், பின்னால் சென்ற சாதிக் பாசா, டார்லிங், டார்லிங் கொஞ்சம் நில்லு என பாட்டுபாடி, அவரின் கையைப்பிடித்து கலாட்டா செய்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் இதை பார்த்து, சாதிக்பாசாவை பிடித்து தர்ம அடிகொடுத்தனர், பின்னர், சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி , போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சாதிக் பாசாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.