திருவல்லிக்கேணியில் துணிகரம்: வாலிபரை வழிமறித்து ரூ.6.5 லட்சம் வழிப்பறி..!

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.6.5 லட்சம் வழிப்பறி செய்த, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அனுப் கோஷ் (38). இவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பிரபல செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் மொத்த விற்பனை நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார்.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சவுகார் பேட்டைக்கு சென்று அங்குள்ள செல்போன் கடைகளில் பணம் வசூலித்தார். பின்னர், சிந்தாரிப்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.

திருவல்லிக்கேணி மன்றோ சிலை அருகே செல்லும்போது, அங்கு பின் தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் அனுப் கோசை வழிமறித்தனர்.

அவர்கள் திடீரென அனுப் கோசை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.6.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அனுப் கோஷ், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.