வீட்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகை திருட்டு: உறவினர் கைவரிசையா என விசாரணை

சென்னை, சாலிக்கிராமத்தில் வீட்டு பீரோவில் இருந்த, 30 சவரன் நகை திருடப்பட்டது. உறவினர்கள் கைவரிசையா என விசாரணை நடந்து வருகிறது.

சென்னை, சாலிகிராமம் வால்மீகி தெருவைச்  சேர்ந்தவர் வெங்கடசுப்ரமணியன். இவர் ஓய்வுபெற்ற வங்கி மேனேஜர் ஆவார். இவர் மனைவி சீதா கடந்த ஜூலை மாதம் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, தனது 30 சவரன் தங்க நகைகளை கழற்றி  பீரோவில் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில், பீரோவில் இருந்த நகைகளை சீதா சரி பார்த்தார். அப்போது அங்கு வைத்த 30 சவரன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வெங்கடசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உறவினர்கள் கைவரிசையா அல்லது கொள்ளையர்கள வீட்டுக்குள் புகுந்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.