மந்தைவெளியில் பரபரப்பு..! பேருந்து பணிமனையில் சிசிடிவி கேமிரா திருட்டு;

சென்னை, மந்தைவெளி பேருந்து பணிமனையில் சிசிடிவி கேமிரா திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மந்தைவெளி மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு, மாநகர இயக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைக்காக பணிமனையில்   சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டது. இந்தநிலையில்,  நேற்று அந்த சிசிடிவி கேமிரா மாயமாகி இருந்தது.

அதை யாரோ திருடிவிட்டனர். பணிமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து,  உடனடியாக கிளை மேலாளர் கோவிந்தராஜிடம் தெரிவித்தனர்.

அவர் புகாரின் பேரில், பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம், மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.