சிபிசிஎல் கம்பெனியில்
25 அடி உயர்த்தில் இருந்து விழுந்த, ஒப்பந்த தொழிலாளி பரிதாப சாவு:

சென்னை, மணலி, சிபிசிஎல் கம்பெனியில், 25 அடி உயரத்தில் இருந்து விழுந்த, ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
   
சென்னை, மணலி, முதல் தெருவை சேர்ந்தவர் இசக்கி   இவரின் மகன் அய்யாதுரை (58). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர், கடந்த மூன்று மாதமாக, முரளி என்பவரின் காண்ட்ராக்டில் சிபிசிஎல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்த அய்யாதுரை, ஆயில் பிளான்டில் இருந்தார்.

வேலையின் போது, அவர் திடீரென 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். சல்பர் பவுடர் கலவையில் விழுந்த அய்யாதுரையின் தலையில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யாத்துரை உடலை கைப்பற்றினர். பின்னர், அஜாக்கிரதையாக வேலை வாங்கிய கான்ட்ராக்டர் முரளி, சூப்பர்வைசர் ஜார்ஜ்,வேலை வாங்கிய ஆப்ரேட்டர், சேப்டி ஆபிசர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.