ஓடி, ஓடி ஒளிந்த சிவசங்கர் பாபா, தேடி, தேடி அலைந்த சிபிசிஐடி; காசியாபாத்தில் கைது செய்தனர்

மாணவிகளின் பாலியல் புகாருக்கு ஆளான சிவசங்கர் பாபா, டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி, ஓடி அலைய ஆரம்பித்தார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி, தேடி, காசியாபாத்தில் வைத்து கைது செய்தனர்.

சென்னை, கேளம்பாக்கம் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையை போலீசார், 354 பெண்ணை மானபங்கம் படுத்துதல், 363 பிள்ளை பிடித்தல், 366 பெண்ணை வசியம் செய்து பாலுணர்ச்சியை தூண்டுதல், பெண் வன்கொடுமை சட்டம் என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன. டிஎஸ்பி குணவர்மன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில், புகார் அளித்த 3 மாணவிகளின் வாக்கு மூலத்தை பெற்றனர். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லை என டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான குழு, டேராடூன் சென்றனர். இதற்கிடையில் அவர் தப்பித்து செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன. தன்னை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் விரைந்து வருவதை அறிந்த சிவசங்கர் பாபா, மருத்துவமனையில் இருந்து தப்பினார். பின்னர் எங்கு ஓடுவது என தெரியாமல் ஓடி, ஓடி, கடைசியில் உத்திரபிரேதச மாநிலம், காசியாபாத்தில் பதுங்கினார். சிபிசிஐடி போலீசாரும் அவரை தேடி கண்டுபிடித்து காசியாபாத்தில் வைத்து கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.