கார்- பைக் நிறுத்துவதில் தகராறு; பெண்ணின் முடியை பிடித்து தரதரவென இழுத்த வீடியோ வைரல்..!

சென்னை, மாங்காடு பகுதியில் கார்-பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், மாடிப்படியில் இருந்து பெண்ணின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாங்காடு, பத்மாவதி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நித்யா(37).

இவருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில் வேறு ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

அது குறித்து கேட்டபோது கீழ்தளத்தில் வசிக்கும் மோகன் என்பவர் நிறுத்த சொன்னதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நித்யா அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசிக்கும் மோகனிடம் கேட்க சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த இரும்பு கதவை வேகமாக திறந்து கொண்டு வெளியே வரும்போது அவரது தாயின் முகத்தில் பட்டதில் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நித்யாவின் மீது அடித்துள்ளார்.

பதிலுக்கு அவரும் செருப்பை கழட்டி அடித்துள்ளார் இதில் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்த போது நித்யாவும் மோகனை காலால் தாக்கி உள்ளார்.

இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை.