செல்போன் கேமால் விபரீதம்; பெல்ட்டால் இறுக்கி தம்பி கொலை; தப்பியோடிய அண்ணன் கைது

சென்னை, அண்ணா நகரில், செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகளை அடித்த ஆத்திரத்தில், பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தம்பியை கொடூரமாக கொலை செய்து விட்டு, தப்பிசென்ற அண்ணனை கைது செய்தனர்.

சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரின் மகன் ராசு (32). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார்.

இவருக்கு 5 வயது மகள் உள்ளார். நேற்று   இரவு, வீட்டில், ராசுவின் மகள் செல்போனில் கேம் விளையாடினார். அங்கு, போதையில் தள்ளாடியபடி வந்த  ராசுவின் தம்பி  சந்திரன் (எ)விக்கி (20) வீட்டிற்கு வந்தார்.

ராசுவின் மகளிடம் எப்போதும் செல்போனில் கேம் விளையாட்டா என கேட்டு, அவளை சரமாரியாக தாக்கினர்.  

இதை பார்த்து ஆத்திரமடைந்த ராசு, தன் மகள் கெம் விளையாடுவாள்? என்ன வேண்டுமானாலும் செய்வர நீ யாருடா அடிப்பதற்கு என கேட்டார்.

இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது.

இந்த சண்டையில் ராசு, ஹாங்கரில் மாட்டிவைத்த   பெல்ட்டை எடுத்து, சந்திரன் கழுத்தை பலமாக இறுக்கி கொன்றார். பின்னர், அங்கிருந்து அவர் தப்பினார்.

புகாரின் பேரில், நொளம்பூர் போலீசார், சந்திரன் உடலை கைப்பற்றி, நேற்று அதிகாலை, தப்பியோடிய ராசுவை கைது செய்தனர்.

கொல்லப்பட்ட சந்திரன் மீது வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.