மளிகை கடையின் பூட்டு உடைத்து, கல்லாப்பெட்டி பணம் கொள்ளை..!

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், மளிகை கடையின் பூட்டு உடைத்து, கலலப்பெட்டியில் இருந்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சரவணன் ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும், வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில் சரவணன் திங்கள்கிழமை காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டிருப்பதையும், அங்கிருந்த பொருள்கள் அள்ளிச் செல்லப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சரவணன், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.

ஏற்கெனவே இரு நாள்களுக்கு இதே பகுதியில் இரு கடைகளின் கதவு பூட்டை உடைத்து, பணம் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.