ஆந்திரா கடலில் மூழ்கிய விசைப்படகு 11 காசிமேடு மீனவர்கள் கதி என்ன ?உறவினர்கள் தவிப்பு

ஆந்திரா கடலில், மீன்பிடிக்கும் போது, விசைப்படகு மூழ்கியது. அதில் பயணித்த 11 காசிமேடு மீனவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை என உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை, ராயபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் ஜான். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 7ம் தேதி அன்று காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சோமேஷ், ஜெகன், நீலகண்டன், சூரிய நாராயணன், காமேஷ், ராஜூ, சிவாஜி, பாலையா, அப்பராவ், பாபு உள்ளிட்ட 11 பேர் கடலுக்கு சென்றனர். ஆந்திர மாநிலம், ராமையா பட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பழுது ஏற்பட்டு விசைப்படகு மூழுகியது. அதில் பயணித்த 11 பேரின்  கதி என்ன ஆனது என தெரியவில்லை. உறவினர்கள், மீனவர்கள் மாயம் குறித்து சென்னை மீன் வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.