ரவுடி செய்றதை நீ செய்யலாமா?பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்; வங்கி ஊழியர் கைது

சென்னை, மயிலாப்பூர் பகுதியில், பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். ரவுடிங்க செய்றதை நீ செய்யலாமா என போலீசார் அறிவுரை கூறினர்.

சென்னை, மயிலாப்பூர், கைலாசபுரம் துலுக்காணத்தம்மன் கோயில் பின்புறம் சில இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் காட்சியின் வீடீயோ வைரல் ஆனது.

இது தொடர்பாக மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பரந்தாமனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டதும், அவர் தான் கூட்டாளிகள் பட்டாக் கத்தியினால் கேக்கை வெட்டியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பரந்தாமன்,அதேப் பகுதியைச் சேர்ந்த  அஜித் (25), கோபி (37), பிரவீண் (25), நவீன் (28), நிஷாந்த் குமார் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ரவுடிங்க செய்றதை நீங்களும் செய்யலாமா என போலீசார் அறிவுரை கூறினர்.