ஷேர் ஆட்டோவில் சென்ற 14 வயது சிறுமியை கடத்த முயற்சி..!

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் சென்ற 14 வயது சிறுமியை கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, இருசப்ப மேஸ்திரி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி, ஷேர் ஆட்டோவில் சென்றார்.

லட்சுமி கோயில் அருகே வரும்போது, அந்த ஆட்டோவில் பயணித்த இரண்டு மர்ம நபர்கள் சிறுமி மீது கைப்போட்டு, அவரை கடத்த முயற்சித்தனர்.

சிறுமி கத்தி கூச்சலிட்டு, ஆட்டோவில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு உடலில் சிராய்ப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடவே, ஆட்டோவில் இருந்து எகிறி குத்தித்து இரண்டு பேர் ஓடிவிட்டனர்.

தகவல் கிடைத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து, சிறுமியை மீட்டு, ஆட்டோ டிரைவர் எண்ணூர், நேதாஜி நகரை சேர்ந்த சார்லஸ் (49) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.