ஆரணி ஆற்றில் குளித்த வட மாநில வாலிபர் மூழ்கி பலி; 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு..!

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றில் குளித்த வட மாநில வாலிபர் மூழ்கி பலியானார். 3 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் மீட்கப்பட்டன.

 திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை, பெரியப்பாளையம், ஆரணி, பொன்னேரி, பெரும்பேடு ஆகிய பகுதிகளில் ஆறுகள் உள்ளன. ஆந்திராவில் பலத்த மழை பெய்வதால் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த உபரி நீர், ஆரணி வழியாக சென்று பழவேற்காடுக்கு சென்று கடலில் கலக்கும். ஆற்றின் தடுப்பணையில் அதே பகுதியில் உள்ள செங்கற் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பணிபுரியும் வட மாநிலத்தை சேர்ந்த பிஜே துர்கா குளிக்க சென்றார்.

ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அவர் அடித்து செல்லப்பட்டார். பொன்னேரி தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கியவரை தேடினர், கிடைக்கவில்லை.

இரண்டு நாட்களாக பிஜே துர்கா உடல் தேடும் பணியில் இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது நாளாக, பிஜே துர்கா உடல் மீட்கப்பட்டன. இது குறித்து, மீஞ்சூர் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.