16 வயது சிறுமிக்கு திருமணம், வாய் பேச முடியாத ஆந்திர மாப்பிள்ளை போக்சோவில் கைது

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்கு பதிந்து வாய் பேச முடியாத ஆந்திர மாப்பிள்ளையை போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி. அவரின் பெற்றோர் கடந்த மே மாதம் ஆந்திராவுக்கு சென்றனர். அங்கு அவரின் உறவினர் மகனான ரமேஷ் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். ரமேஷ் வாய் பேச முடியாத மாற்று திறனாளி ஆவார். இந்த நிலையில் மரு வீட்டிற்கு, சிறுமியை திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர். உடன் ரமேஷும் வந்திருந்தார். சிறுமி கழுத்தில் தாலி கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மாவட்ட சமூக நல துறைக்கு சென்றது.

பின்னர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு பெற்றோர் மீது வழக்கு பதிந்தார். பின்னர் ரமேஷை போக்சோவில் கைது செய்தனர்.