முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் சோதனை; ரூ.11 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

அதிமுக ஆட்சியில்,முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோத்னை நடத்தினர். ரூ.11 கோடி சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில், முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தவர் கே.பி, அன்பழகன். இவர், பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டன.

இந்த நிலையில், கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமான உறவினர்கள் பெயரிலும், பினாமியிலும் சொத்துகள் இருப்பதாக தர்மபுரி, இலக்கியம்பட்டி, அன்னசாகரம், கெரோகோடாள்லி, பாலக்கோடு, காரி மங்கலம், அரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

அங்குள்ள பள்ளி, கல்வி நிறுவனங்கள், கிரானைட், கல் குவாரிகளிலும் சோதனை நடத்தியது. மேலும், கிருஷ்ணகிரி, சேலம், தெலுங்கானா உள்ளிட்ட 57 இடங்களில் சோதனை நடைபெற்றது,

எம்.எல்.ஏ வீட்டிலும்;
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ
கோவிந்தசாமி. இவர், கே.பி.அன்பழகனின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர், அவருக்கு, பினாமியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கோவிந்தசாமி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. அவரின் சகோதரர் பழனிசாமி, நேரு நகர் உறவினர் பொன்னுவேல் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது,
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.