பெரும் தொகை கொண்டு செல்லும் போது போலீசார் உதவியை நாடலாம் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அறிவுரை

பெரும் தொகை கொண்டு செல்லும்போது, போலீசார் உதவியை நாடலாம் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கினார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில், அங்குள்ள டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று போடப்பட்டன,

அதில், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வரும் நபர்களை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமாக மதுபானம் வாங்கி சென்றால், உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம். பெரும் தொகை கொண்டு செல்லும் போது, போலீசாரின் உதவியை நாடலாம் என்றார்.

இந்த கூட்டத்தில், துணை கமிஷனர் சுரேஷ் குமார் நுண்ணறிவு பிரிவு  உதவி கமிஷனர் நாகசங்கர், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிறை சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.