ஜூன் 14 அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை

ஜூன் 14 அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வருபவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும், எம்.எல்.ஏக்கள் தவிர கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி இல்லை என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு வருமாறு: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகின்ற ஜூன் 14 திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜூன் 14 அன்று கட்சி தலைமை கழக அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளதால் கொரோனா பெருக்கத்தின் காரணமாக அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தலைமைக் கழகத்திற்கு வருகை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு கட்சித் தலைமை வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.