அதானி குழுமத்துக்கு ஒரேநாளில் ரூ.46 ஆயிரம் கோடி இழப்பு: என்ன காரணம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று அதானி குழுமத்தின் பங்குகள் ஏறக்குறைய 7 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் கெளதம் அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் ரூ.46 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று மிகப்பெரிய சரிவுக்கு காரணங்களில் முக்கியமானது அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான அடிவாங்கியதாகும்.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பெர்க் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட தகவல்தான் அதானி நிறுவனத்தை ஆட்டிப் பார்த்துவிட்டது.

ஹிடன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கையால், அதானி குழுமத்துக்கு இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.46 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது, மோசடி செய்துள்ளது என ஹிடன்பெர்க்அறிக்கை தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக ஆய்வு செய்து அதன் பங்கு நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு, சர்வே செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையால் அதானி குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,086 கோடி சரிந்துள்ளது. அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்துக்கு ரூ.12,366 கோடி இழப்பும், அதானி போர்ட் நிறுவனத்துக்கு ரூ.8,342 கோடியும், அதானி டிரான்ஸ்மிஷனுக்கு ரூ.8,039 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹிடன்பெர்த் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினோம். அதில், ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஏறக்குறைய 12000 கோடி டாலருக்கு அதிபதியாக உள்ளார்.

உலகளவில் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் அதானியின் சொத்து மதிப்பு பெரும்பாலும் பங்குகளின் உயர்வால் கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டியதாகும்.

இந்த 3 ஆண்டுகளில் அதானிகுழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்குகளும் 819 சதவீதம் சராசரியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு மதிப்பு மட்டும் 125% உயர்ந்தது, அதானி பவர், சமையல் எரிவாயு ஆகியவற்றின் பங்குகள் 100 சதவீதம் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது

கரீபியன் நாடுகள்,மொரிஷியஸ், ஐக்கிய அரபுஅமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதானி குழுமம் பல்வேறு போலி நிறுவனங்களை நடத்துகிறார்.

அதானி நிறுவனத்துக்கு கடன் அளவுக்க அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் 2022, மார்ச் 31ம் தேதி முடிவில் அதானி நிறுவனத்தின் கடன் 40 சதவீதம் உயர்ந்து 2.20 லட்சம் கோடியாகஅதிகரித்துள்ளது எனத் தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கையால் பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அதானி குழுமத்தின் பங்குகள் ஏகத்துக்கும் அடிவாங்கின.

குறிப்பாக அதானி போர்ட் பங்குகள் 7.3 %, அதானி என்டர்பிரைசஸ் 3.7%, அதானியின் அம்புஜா சிமென்ட் 9.7%, ஏசிசி 7.2 சதவீதம் சரிந்தன