காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா சாமி தரிசனம்; பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு..!

சென்னை, மண்ணடி பகுதி காளிகாம்பாள் கோவிலில், நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். இதை பார்த்த பக்தர்கள் முண்டியத்ததால் பரபரப்பு ஏற்பட்டன.

சென்னை நகர மன்ற உள்ளாட்சி தேர்தலில், கவுன்சிலராக வெற்றி பெற்று, மேயரான பிரியா ராஜன், வெற்றி பெற்றதை மித்ரா சேவா சமிதி அமைப்பின் சார்பில், மண்ணடி காளிகாம்பாள் கோவிலில் அபிஷேகம் மற்றும் அன்னதானம் போடப்பட்டன.

சென்னை மேயர் பிரியா ராஜன் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தார். அப்போது, அந்த அமைப்பின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதால் நடிகை நயன் தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார்.

மேயருடன், நயன் தாரா சாமி தரிசனம் செய்தார். இதை பார்த்த பக்தர்கள், நயன் தாராவை பார்க்க முண்டியடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன.