நடிகர் விஜய் வீட்டிற்கு வந்த முன்னாள் நிர்வாகி திடீர் கைது மனைவி கண்ணீர் பேட்டி

சென்னையில், நடிகர் விஜய் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்த முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவரின் மனைவி கண்ணீர் பேட்டி கொடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார்.  விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணை செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு  வகித்து வந்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேலையும் பார்த்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று குமார் தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய் வீட்டு முன்பு நின்றார். விஜய் பீஸ்ட் படபிடிப்பிற்க்கு சென்றுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஜய் வீட்டில் இருந்து ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நீலாங்கரை போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குமார் மனைவி வசந்தி கூறும் போது:

தன் கணவர் குமாரை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், அதனால் நடிகர் விஜய் அளித்த வீட்டில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து டார்சர் செய்வது வருவதால் இது குறித்து நடிகர் விஜயினை நேரில் சந்தித்து கேட்டறிய வந்ததாகவும் ஆனால் விஜய் படபிடிப்பிற்க்கு சென்றதை அறிந்ததும் தாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.