டெல்லியில் லாக்டவுனை தளர்த்தியும் வரவில்லை: கிராமத்தில் முடங்கிய தொழிலாளர்கள்

டெல்லியில் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட தொடங்கிய பிறகும், லாக்டவுன் சமயத்தில் சொந்த கிராமத்துக்கு சென்ற 65 சதவீத தொழிலாளர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை வாஜிபூர் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் ஒட்டு மொத்தமாக 24 தொழில்துறை பகுதிகள் உள்ளன. 450க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை கொண்ட வாஜிப்பூர் தொழில்துறை பகுதி தினசரி கூலி தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில் முக்கிய பங்கினை கொண்டுள்ளது. கடந்த 6 வாரங்களாக அமலில் இருந்த லாக்டவுனால் தொழிலாளர்கள் கடுமையான இடர்பாட்டை சந்தித்தனர்.

தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததையடுத்து கெஜ்ரிவால் அரசு நேற்று முதல் லாக்டவுனை படிப்படியாக தளர்த்த தொடங்கியது. இதனையடுத்து தொழிலாளர்கள் மெதுவாக பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக இங்குள்ள தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

வாஜிப்பூரில் எஃகு பாத்திர தொழிற்சாலையை நடத்தி வரும் தீபக் குப்தா என்பவர் கூறுகையில், டெல்லி அரசாங்கத்தின் முடிவு மிகச் சிறப்பாக கணக்கிடப்படுகிறது. அன்றாட அடிப்படையில் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு இந்த முடிவு நிவாரணமாக இருக்கும். இதன் தாக்கம் நிச்சயமாக கடந்த ஆண்டுகளை விட குறைவாகவே இருந்தது.

பல தொழிலாளர்கள் மீண்டும் கிராமத்துக்கு சென்றனர் இன்னும் வரவில்லை. இப்போதைக்கு எங்கள் தொழிலாளர்களில் 25 முதல் 33 சதவீதத்துக்கும் அதிகமானோர் திரும்பவில்லை என்று தெரிவித்தார்.