கத்தார் நாட்டில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்

கத்தார் நாட்டில் இருந்து, ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்தனர். ஷூ, சாக்சில் மறைத்து வைத்திருந்தார்.

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து இண்டிகோ ஏர் லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை வந்தது. சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் இருந்து பயணிகள் இறங்கினர். சென்னையை சேர்ந்த சதீஷ் என்பவர் தன்னிடம் எந்த உடமையும் இல்லை என  கிரீன் சேனல் வழியாக சென்றார். ஆனால், அவரின் நடையில் வித்தியாசம் காணப்பட்டன. சுங்கத்துறை அதிகாரிகள் சதீஷை பிடித்து அவரின் ஷூ, சாக்சை கழட்டி பார்த்தனர். அதில், 140 கிராம் எடைக் கொண்ட 3 தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். பின்னர், சதீஷை போலீசில் ஒப்படைத்தனர்.