கோடம்பாக்கம் பகுதியில் விபரீதம் சாலை தடுப்பில் பைக் மோதியதில் சட்டக்கல்லூரி மாணவர் பலி

சென்னை, கோடம்பாக்கம் பகுதியில், சாலை தடுப்பில் பைக் மோதியதில், சட்டக்கல்லூரி மாணவர் பலியானார்.
 
சூளைமேடு கிருஷ்ணாபுரம் தெருவைச் சேர்ந்த  ஸ்ரீராம் மகன் விக்னேஷ்(20). இவர் மதுரவாயலில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

விக்னேஷ், இன்று காலை திங்கள்கிழமை தனது பைக்கில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திடம் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக்  சாலையோரம் உள்ள ஜெனரேட்டர் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த விக்னேஷ், சம்பவ  இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விக்னேஷ் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.