மத்திய பட்ஜெட்டில் எந்தெந்தப் பொருட்கள் விலை குறையும், அதிகரிக்கும் ?

2021-22ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில், எந்தெந்த பொருட்கல் விலை குறையும், அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க வரி குறைப்பால், தங்கம் விலை வரும் காலத்தில் குறையும், இறக்குமதி வரி அதிகரிப்பால் பிரிட்ஜ், ஏசி விலை உயரும்.

விலை அதிகரிக்கும் பொருட்கள்:
- ஃபிரிட்ஜ்,ஏ.சி.களில் பொருத்தப்படும் கம்ப்ரஸர்கள்
- எல்இடி விளக்குகள்
- சர்கியூட் போர்ட், அதன் உதரிபாகங்கள்.
- கச்சா பட்டு மற்றும் பருத்தி வகைகள்
- சோலார் பேனல், இன்வெர்ட்டர்கள்,
- வாகனங்களில் பயன்படுத்தப்படும் கடினத்தன்மை கொண்ட கண்ணாடிகள்
- வாகனங்களில் பயன்படுத்தப்படும் வைப்பர்கள், சென்சார்கள்
- மொபைல் போனில் பாகங்கள், பிசிபிஏ, கேமிரா, கனெக்டர்கள், பேக்கவர்
- மொபைல் போன் சார்ஜர்கள்
- லித்தியம் அயன் பேட்டரியின் உள்ளீடு பாகங்கள்
- பிரிட்டர்களில் பயன்படுத்தப்படும் காட்ரேஜ்
- விற்பனைக்கு தயாராக இருக்கும் தோல் பொருட்கள்
- நைலான் ஃபைபர், பிளாஸ்டிக்
- செயற்கை கற்கள், பட்டை தீட்டப்பட்ட கற்கள்,ஜிர்கோனியா

விலை குறையும் பொருட்கள்
- தங்கம், வெள்ளி தூதுப்பொருட்கள்.
- தங்கம், வெள்ளிக் கட்டிகள்
- பிளாட்டினம், பளாடியம்
- சர்வதேச அமைப்புகள் மூலமாக இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள்.