நுங்கம்பாக்கம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று  பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, நுங்கம்பாக்கம், காமராஜ குளம், 2வது தெருவை சேர்ந்தவர் சஞ்சய் மங்கல் (25). இவரிடம் சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத மூன்று பேர் செல்போனை பறித்து தப்பினர். தொடர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் மர்ம நபர்கள், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெருவை சேர்ந்த  பரத் குமார் (19), கைது செய்யப்பட்டார். இவருடன் கூட்டு சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் இரண்டு பேரும் கைதாகினர். இவர்களிடம் இருந்து நான்கு செல்போன்கள் கத்தி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.