பணம் வைத்து சூதாட்டம் 27 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, தி நகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
சென்னை, தி நகர், டி.என் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டாவது மாடியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக, பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடியயதாக வேளாச்சேரியை சேர்ந்த ஆனந்தராஜ்,(52), பாக்யா சீனிவாச ராவ்(50), சேது ராஜேந்திரன்(64), மணி(70), அசோக் நகரை சேர்ந்த மாரிமுத்து(46), அசன் பாஷா(52), மனோகரன்(50) உட்பட 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 32,430 மற்றும் 5 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.