எண்ணூரில் பயங்கர சம்பவம், இரவு வீட்டுக்குள் புகுந்து ரவுடியை வெட்டிய கும்பல் கைது

சென்னை, எண்ணூரில், இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கும்பலை கைது செய்தனர்.

சென்னை, எண்ணூர், நேதாஜி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது அவர் ஆட்டோ ஓட்டி வந்தார். தாயுடன் வசித்து வந்த ஆறுமுகம் நேற்று இரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் சிமண்ட் சுவரை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ஆறுமுகத்தை வெட்டினர். அதற்குள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யப்பட்டன. ஆனால் அந்த கும்பல் ஆறுமுகத்தை வெட்டிக் கொன்றுஅங்கிருந்து தப்பிவிட்டனர்.

தகவல் கிடைத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் எண்ணூர் போலீசார் விரைந்து வந்தனர். விசாரணை நடத்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி தேடுதல் வேட்டை நடத்தி நான்கு மணி நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் (23), நியான் வினோத் (21), கிளிண்டன் (21), தேசப்பன் (22) மற்றும் ஆகாஷ் (18) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பழைய பகையை தீர்க்க ஆறுமுகத்தை வெட்டி கொன்றதாக தெரிவித்தனர்.