அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து; நடத்துனர், பயணி காயம்

சென்னை, மாத்தூர் பகுதியில், அரசு பேருந்து  மீது கண்டெய்னர் லாரி மோதியதில், நடத்துனர் மற்றும் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார்.

சென்னை, பிராட்வே பகுதியில் இருந்து மணலி நோக்கி  தடம் என் 44 அரசு பேருந்து குறைவான பயணிகளுடன் வந்தது.

சைதாப்பேடையை சேர்ந்த ஓட்டுனர் பால்தாஸ்(53) பேருந்தை ஒட்டி வந்தார்.

நடத்துனர் கொடுங்கையூர் ரவி(44) இருந்தார். மாத்தூர், பக்கிம்காங் கால்வாய் அருகே வரும்போது, கண்டெய்னர் லாரி ஒன்று, அரசு பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் ரவி மற்றும் பெண் பயணி தேன்மொழி என்பவர் காயம் அடைந்தனர்.

தகவல் கிடைத்து, மணலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து காயமடைந்த ரவி, தேன்மொழி ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்து, கண்டெய்னர் லாரி டிரைவர் அரியலூர், ஜெயம் கொண்டம் பகுதியை சேர்ந்த மகாதேவன் (32) என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.