2020ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99% பெண் குழந்தைகளுக்கு எதிரானவை: என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

2020ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன.

இதன் மூலம் சமூகத்தில் அதிகமாகப் பாதி்க்கப்படும் பிரிவில் பெண்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய குற்றஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.


உலக பெண் குழந்தைகள் தினம் நேற்று இந்தியாவில் கொண்டாடப்பட்ட நேரத்தில் இதுபோன்ற வேதனைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.


போக்ஸோ சட்டத்தில் கீழ் குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வரை கிைடக்கும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்தபோதிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற எண்ணிக்கை குறையும் அளவு குறைவாக இருக்கிறது.

என்சிஆர்பி புள்ளிவிவரங்களை குழந்தைகளுக்கான அமைப்பான குழந்தைகள் உரிமை மற்றும் யு(சிஆர்ஒய்) ஆய்வு ெசய்து வெளியி்ட்டுள்ளது. இதில் கடந்த 2020ம் ஆண்டில் போக்ஸோ சட்டத்தில்கீழ் 28ஆயிரத்து 327 குற்றங்கள் பதிவாகின இதில் 28ஆயிரத்து 50 குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிரானவே என்பது பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே கேள்விக்குரியாக்கியுள்ளது.


இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால், 16வயது முதல் 18வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 92 குற்றங்கள் நடந்துள்ளன. 12 முதல் 16வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக 10ஆயிரத்து 499 குற்றங்கள் நடந்துள்ளன.


சிறுவர்கள், சிறுமிகள்இருவவருமே பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்றாலும், என்சிஆர்பி புள்ளிவிவரங்களில் அடிப்படையில் பார்த்தால் சிறுவர்களைவிட, பெண் குழந்தைகளுக்கான பாதிப்புதான் அதிகமாக இருக்கிறது.

அதாவது, 2020ம் ஆண்டுக்கான போக்ஸோ சட்டத்தில் பதிவான குற்றங்கள் குறித்து என்சிஆர்பி புள்ளிவிவரங்களில் 99 சதவீத குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிராகவே நடந்துள்ளன.


இதுகுறித்து குழந்தைகளுக்கான அமைப்பான குழந்தைகள் உரிமை மற்றும் யு (சிஆர்ஒய்) அமைப்பின் இயக்குநர் பிரித்தி மஹாரா கூறுகையில் “குழந்தைகளுக்கான வன்முறையில் அதிகமாக பலியாவது, பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான், இதை ஒதுக்கிவைத்துப் பார்க்கக்கூடாது.

கல்வி, சமூகபாதுகாப்பு, ஏழ்மை ஆகியவற்றோடு பெண் குழந்தைகள் பாதுப்பில் சவாலான சூழல் நிலவுகிறது. பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பும் பெண் குழந்தைகளுக்கான பாதிப்பும் முக்கியமானது.


இந்த சிக்கலான நேரத்தில் பெண் குழந்தைகளுக்கு போதுமான கல்வி கிைடக்கவில்லை, வீ்ட்டுக்குள் முடங்கும்சூழல் ஏற்பட்டது, குழந்தை திருமணத்துக்குள் தள்ளப்பட்டனர்.

அதுமட்டுமல்லால் இதுபோன்ற பாலியல் வன்முறை, பாலியல் சுரண்டல், துன்புறுத்தலுக்கும் பெண் குழந்தைகள் ஆளாகினர்.
ஆதலால், பெண் குழந்தைகளுக்கு எதிரான வலுவான பாதுகாப்பு முறையை உருவாக்குவது அவசியம்.

கடந்த சில ஆண்டுகளாக, பெண் குழந்தைகளுக்கான கல்விச் சூழல், பாதுகாப்பு முறைகள் வலிமைஅடைந்து முன்னேற்றம் பெற்று வருகிறது. ஆனால் இவற்றை கரோனா தொற்று பாதித்துவிட்டது.


குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே கைவிடுதல், பாதுகாப்பு குறைபாடு, பாலியல் சீண்டல் போன்றவை கரோனாவுக்குப்பின் அதிகரித்துள்ளன.

அதிலும் பதின்வயதில், வயதுவந்த பெண் குழந்தைகள் பல்வேறுவகையான பாதுகாப்புச்சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.
இவ்வாறு மஹாரா தெரிவித்தார்.

You may have missed