அடியாட்களுடன் கத்திகள் வைத்து, கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் தாதாக்கள் உட்பட 9 பேர் கைது

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் அடியாட்களுடன் கத்திகள் வைத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் தாதாக்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள், 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

 சென்னை, கொடுங்கையூர், இந்திரா நகர், கைலாசம் தெருவில், வீடு ஒன்றில் பதுக்கி வைத்து, கஞ்சா விற்பனை நடந்தது.

கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்று, அந்த வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு, 12 கிலோ கஞ்சா, ஐந்து கத்திகள் கிடந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மூன்று இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர். பின், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், இந்திரா நகரை சேர்ந்த தாரணி(24), அவரின் அக்காள் வினோதினி (25),  திரு நங்கை ஹரிகரன் (எ) ஹரிதா (22).

நெற்குன்றம், கார்த்திக்கேயன் தெருவை சேர்ந்த மதன்(22). கடும்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆல்பர்ட்(26).

திருமுல்லைவாயல், கண்ணம்பாளையத்தை சேர்ந்த கவியரசன்(21).

கொடுங்கையூர், காந்தி நகரை சேர்ந்த ஜீவானந்தம் (22). குமரன் நகரை சேர்ந்த லோகேஷ் (20). தர்மலிங்க நகரை சேர்ந்த கேப்ரியல் மனோஜ் (20) என தெரியவந்தது.

மேலும் விசாரணையில், தாரணி மீது, அவரின் கணவரை கொன்ற வழக்கு உள்ளது. வினோதினி மீது, கஞ்சா வழக்கு உள்ளது.

இருவரும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, அடியாட்களை வைத்து, கத்தி முனையில் கஞ்சா விற்று, தாதா போல் செயல்பட்டதும் தெரியவந்தது.