பாலியல் பலாத்காரம் செய்து 85 வயது மூதாட்டி கொலை; டிராக்டர் டிரைவர் சிக்கினார்

பொள்ளாச்சியில், சாலையில் வசித்து வந்த 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற டிராக்டர் டிரைவர் கைதானார்.  

பொள்ளாச்சி, ஆனை மலை, மாரப்பகவுண்டன் புதூரில், தோட்டத்து சாலை உள்ளது. இங்கு சாலையில் வசித்து வந்த 85 வயதான மூதாட்டி ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். சந்தேக மரணம் என ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம், கணபதி பாளையத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பொன்னுசாமி என்பவர் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மதுபோதையில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து போலீசார், பொன்னுசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.