47 ஆண்டுகளுக்கு முந்தைய, பழைய 20 ரூபாய் நோட்டுடன், பேத்திக்கு மிட்டாய் வாங்க வந்த மூதாட்டி..!

தூத்துக்குடியில், வாரசந்தைக்கு, 47 ஆண்டுகளுக்கு முந்தைய, பழைய 20 ரூபாய் நோட்டுடன் பேத்திக்கு மிட்டாய் வாங்க வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், உடன் குடிடியில், வாரம் ஒரு முறை, வாரசந்தை கூடுவது வழக்கம்.

பெரிய வார சந்தையான இதில், விவசாயிகள், வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பனைகாக கொண்டு வருவார்கள்.

இந்த நிலையில், இந்த வாரசந்தைக்கு, 65 வயது மூதாட்டி,
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க பேத்தியுடன் வந்தார்.

அப்போது, அந்த மூதாட்டி, மிட்டாய் வாங்க 20 ரூபாய் நோட்டை இரண்டை தந்தார்.

அதை வாங்கி பார்த்த, வியாபாரி அதிர்ச்சியடைந்தார். அந்த நோட்டு, 1970-75களில் அச்சிடப்பட்டது.

சுமார் 47 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். கடைக்காரர் அந்த நோட்டை வாங்க வில்லை செல்லாது என கூறிவிட்டனர். இதனால், மூதாட்டி, ஏமாற்றத்துடன் பேத்தியை அழைத்து சென்றார்.