டெல்லியில் இருந்து ஹாங்காங் பயணம் – 47 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி டெல்லியில் இருந்து 188 பயணிகள், தனியார் விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டனர். ஹாங்காங் சட்ட விதிகளின் படி அனைத்து பயணிகளும் புறப்படும் தேதிக்கு முன் 72 மணி நேரத்துக்கு முன்னதாக பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது.

ஆனால் ஹாங்காங் சென்ற பிறகு, அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 188 மொத்த பயணிகளில் 25 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது எடுத்த பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.