அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல், அதிர்ஷ்டவசமாக 20 பேர் உயிர் தப்பினர்

வேப்பூர், திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டதில் அதிர்ஷ்டவசமாக 20 பேர் உயிர் தப்பினர்.

மதுரையை சேர்ந்தவர் பாண்டியராஜன் (50) இவரின் பேத்தி பெயர் சூட்டும் விழா இன்று நடைப்பெற இருந்தது. அதற்காக குடும்பத்துடன் 11 பேர் வேனில் சென்னை நோக்கி அதிகாலை புறப்பட்டனர். அவனியாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் வேனை ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 11 மணியளவில் கடலூர் மாவட்டம், திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, வேப்பூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது பயணிகளை இறக்கிவிட அரசு பேருந்து ஒன்று அங்கு நின்றது. அங்கு வந்த மாருதி கார், பின்னால் வந்த வேன், அதன் பிறகு லாரி என அடுத்தடுத்து நான்கு வாகனங்களும் பயங்கரமாக மோதிக் கொண்டது. வேனில் பயணித்த 11 பேர், காரில் வந்த நான்கு பேர், லாரியில் 2 பேர் என அதிர்ஷ்டவசமாக 20 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed