சிறுவனிடம் செல்போன் பறிப்பு, 4 பேர் கும்பல் உடனடி கைது; கொடுங்கையூர் போலீசார் துரித நடவடிக்கை

சென்னை, கொடுங்கையூர் பகுதியில், சிறுவனிடம் செல்போன் பறித்த வழக்கில் நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் முருகன், இவரின் மகன் பிரவிஜனா (16). இவர் கடைக்கு செல்லும் போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பிரவிஜனா கையை லேசாக வெட்டி செல்போனை பறித்துவிட்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. போலீசார் உடனடியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கணேஷ் (20), சூர்யா (19), கார்த்திக் (19), முகமது ஆசிம் (20), ஆகியோர் என தெரிய வந்தது.