கைக்கொடுக்கும் பெருமாளிடமே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்; 3 அடி கற்சிலையை திருடி சென்றனர்

மதுராந்தகத்தில், கைக்கொடுக்கும் பெருமாள் கோயிலின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 3 அடி கற்சிலையை திருடி சென்றனர்.
 
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கீழாமூர் கிராமத்தில், கைக்கொடுக்கும் பெருமாள் கோயில் உள்ளது. 18 ஆண்டுகளாக இந்த கோயில் உள்ளது. அங்குள்ளவர்கள் இந்த பெருமாளை வணங்கினால் அனைத்து விஷயங்களிலும் கைக்கொடுப்பார் என்ற ஐதீகம் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து வழக்கம் போல் கோயிலை பூட்டி விட்டு சென்றனர்.

நள்ளிரவில், கோயிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள்  3 அடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல்சிலையை திருடிவிட்டு தப்பிவிட்டனர். இன்று அப்பகுதி மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் சிலை திருடப்பட்டிருப்பதையும் பார்த்து புகார் கொடுத்தனர். மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.