இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையனிடம் போராடிய மூதாட்டி, 25 சவரன் நகையுடன் தப்பினான்

விருது நகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில், இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையனிடம் போராடிய மூதாட்டியை தாக்கி, 25 சவரன் நகையுடன் ஓட்டம் பிடித்தான்.

விருது நகர் மாவட்டம், சாத்தூர், மேட்ட மலை பகுதியில், தனியாக வசித்து வருபவர் மாரியப்பன் மனைவி மங்கம்மாள் (70). இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்தான். பீரோவில் இருந்த 25 சவரன் நகையை எடுத்தான். அப்போது சத்தம் கேட்டு மங்கம்மாள் திடுக்கிட்டு எழுந்தார். கொள்ளையனை பிடித்து போராடினார். அவன் மங்கம்மாளின் கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்தான். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவன் தப்பிவிட்டான். சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மங்கம்மாளிடம் விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகின்றனர்.