கருப்பு பூஞ்சை மருந்து விற்பனை, ஓமந்தூரார் மருத்துவமனை ஊழியர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு சிறை

சென்னையில், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை அதிக விலைக்கு விற்ற வழக்கில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனை ஊழியர் உள்ளிட்ட இரண்டு பேரை சிறையில் அடைத்தனர்.

சென்னை, தாம்பரம், இந்து மிஷன் மருத்துவமனை அருகில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற சென்னை, வண்டலூர் சரவணன், சிட்லப்பாக்கம்  நிர்மல் குமார், தஞ்சாவூர் விக்னேஷ், திருவண்ணாமலை அறிவரசன், தம்பி துரை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மருந்துகள், கார், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், வியாசர்பாடி, எம்.கே.பி நகரை சேர்ந்த சிரஞ்சீவி (40), திருப்பத்தூர் பிரசாந்த் (21) ஆகியோரை கைது செய்தனர். இதில் சிரஞ்சீவி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், லேப் டெக்னிசியனாக வேலை பார்த்து வந்தார். நோயாளிகளின் பெயரில் மருந்தை வாங்கி அதிக விலைக்கு விற்று வந்தனர் என்பது தெரிய வந்தது.