ஆன்லைனில் போதை பொருள், கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

சென்னை, பெரவள்ளூர் பகுதியில், ஆன்லைனில்  போதை பொருள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, பெரவள்ளூர் பகுதியில், தடை செய்யப்பட்ட போதை பொருளை ஆன்லைனில் வாங்கி உபயோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு ஒரு வாரமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜவகர் நகர், முதலாவது பிராதன சாலையில் போதையில் நின்றிருந்த  இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை காவல் நிலையம்  அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் 70 அடி ரோட்டை சேர்ந்த டேனியல் (23), வில்லிவாக்கம், பாபா நகரை சேர்ந்த  பிரவீன் குமார் (24) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் அவர்கள் அதை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.