ஆட்டோவில் சவாரி ஏற்றி, மெக்கானிக்கை கத்தியால் குத்தி ரூ.18 ஆயிரம் வழிப்பறி..!

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோவில் சவாரி ஏற்றி, மெக்கானிக்கை கத்தியால் குத்தி, 18 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த நான்கு நபர்களை தேடி வருகின்றனர்.

சென்னை, தண்டையார்பேட்டை,  நேதாஜி நகரை சேர்ந்தவர் சேதுராமன். இவரின் மகன் மணிகண்டன்(29). இவர், தனியார் கம்பெனியில் மெக்கானிக் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி உமா மகேஸ்வரி.

நேற்று மணிகண்டன், கோயம்பேடு பகுதிக்கு சென்றார். அங்கு உறவினர் ஒருவரிடம், 18 ஆயிரம் ரூபாய் பனம் வாங்கிக்கொண்டு, எம்.கே.பி நகர் வந்தார். அங்கு பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஆட்டோ ஒன்று வந்தது, அதில், டிரைவர் மற்றும் பின் சீட்டில் மூன்று நபர்கள் இருந்ததர்.

மணிகண்டனிடம், ஆட்டோ டிரைவர் எங்கே செல்ல வேண்டும் என கேட்டார். அவர் தண்டையார் பேட்டை என்றதும், மணிகண்டனை சவாரி ஏற்றினர்.

ஆட்டோ சென்றபோது, பின் சீட்டில் இருந்த நபர்கள், கத்தியை எடுத்து, மணிகண்டனின் வலது புற வயிற்றிலும், தொடையிலும் குத்தினர்.

அவரிடம் இருந்த 18 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, மணிகண்டனை ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டு தப்பினர்.

 பின்னர், மணிகண்டன், தன் மனைவிக்கு மொபைல்போனில் அழைத்து, அவரின் உதவியுடன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.