போலீசார் சோதனையில் ஆவணமில்லாமல் சிக்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கம்

சென்னை, யானைக்கவுனி பகுதியில், போலீசார் சோதனையில், ஆவணமில்லாமல் ரூ. 6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கம் சிக்கியது.

சென்னை, சவுகார்பேட்டை, ஆடியப்பா தெருவில் யானைக்கவுனி போலீசார் திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு இருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

 இந்த சோதனையில் அவர்களது பையில் இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கநகைகளின் ஆவணங்களை போலீசார் கேட்டனர்.

ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதததினால், தங்கநகைளை பறிமுதல் செய்து, வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தங்கநகைகள் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.