மியான்மர் பச்சை கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 100 பேரைக் காணவில்லை

மியான்மரின் வடபகுதியில் உள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேரைக் காணவில்லை. இதுவரை ஒருவர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சின் மகாணத்தில் உள்ள பகாந்த் பகுதியில் பச்சைக் கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேலான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய நேரப்படிகாலை 4 மணி அளவில் திடீரென மண்சரி்ந்து சுரங்கத்தில் விழுந்து மூடியது. இந்த விபத்தில் சுரங்கத்தில் 100வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை அவர்கள் குறித்து எந்தத்தகவலும் இல்லை. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக் குறித்து அறி்ந்ததும் மீட்புப்படையினர், பேரிடர் மேலாண்மைப்படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப்படையைச் சேர்ந்த கோ நியா கூறுகையில் “இதுவரை

படுகாயங்களுடன் 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஒருவரின் சடலம்கைப்பற்றப்பட்டுள்ளது. சுரங்கத்துக்குள் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம்.

200 பேர் வரை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். சுரங்கத்துக்கு அருகே இருக்கும்ஏரியில் படகுமூலம் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கச்சின் செய்தி நிறுவனம் கூறுகையில் “இதுவரை நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துவிட்டனர். ஹகந்த் மற்றும் லோன் கின் நகரிலிருந்து தீதடுப்பு பிரிவினர்மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

கச்சின் நெட்வொர்க் டெவலப்மென்ட் அளித்த தகவலின்படி, “சுரங்கத்தில் இருந்தவர்களில் 80 பேர்வரை ஏரயில் மூழ்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.

மியான்மரில் உள்ள பச்சை கற்கள் சுரங்கங்கள் உண்ைமயில் மிக ஆபத்தானது. கடந்த 2020ம் ஆண்டு ஹகந்தில் நடந்த மண்சரிவு விபத்தில் 160 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர், 2019ம் ஆண்டில் 54 பேர் உயிரிழந்தனர்.

குறைந்த ஊதியத்துக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் பணியாற்றி வந்தனர். இந்த சுரங்கத்தில் எந்திரங்கள் திடீரென கோளாறு ஏற்படுவது, விபத்துகள் நடப்பது இயல்பானது.

இந்த சுரங்களை தனியார் நிறுவனம் ஏலத்தில்எடுத்துநடத்துகிறது.
கச்சின் மாகாணத்தில் உள்ள ஹகந்த் பகுதியில் உலகிலேயே அதிகமான, விலைமதிப்புள்ள பச்சை க்கற்கள் கிடைக்கும் பகுதியாகும். இங்கு எடுக்கப்படும் பச்சைக் கற்கள் பெரும்பாலும் வரி ஏய்ப்பு செய்து சீனாவுக்கு கடத்தப்படுகின்றன.